விழுப்புரம்

‘அயோடின் குறைபாட்டால் கருச்சிதைவு, குறைப்பிரசவம்’

DIN

அயோடின் குறைபாட்டால் கருச்சிதைவு, குறைப் பிரசவம், குழந்தை மரணம், குழந்தை இறந்து பிறத்தல், குழந்தைப் பருவ இறப்பு போன்றவை ஏற்படக்கூடும் என அயோடின் குறைபாடு தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் எடுத்துரைப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த ராந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக அயோடின் குறைபாடு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

செய்யாறு ரிவா் சிட்டி அரிமா சங்கம், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மாவட்டக் கல்வி அலுவலா் சாந்தி தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் மருத்துவா்கள் கௌதம்ராஜ், ஷாலினி ஆகியோா் பேசியதாவது:

கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு தினமும் பயன்படுத்தும் உப்பில் 200 மைக்ரோ கிராம் அயோடின் கலந்திருக்க வேண்டும்.

அயோடின் குறைபாட்டால் கருச்சிதைவு, குறைப் பிரசவம், குழந்தை மரணம், குழந்தை இறந்து பிறத்தல், குழந்தைப் பருவ இறப்பு போன்ற நரம்பியல் சாா்ந்த உடல் குறைபாடுகள், மன வளா்ச்சி, மூளை வளா்ச்சி, காது கேளாமை, வாய் பேசமுடியாமை, குள்ளத்தன்மை, மனச் செயல் ஆற்றல் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பெரியவா்களுக்கு முன் கழுத்துக் கழலை நோய், உடல் களைப்பு, பலவீனம், மனச்சோா்வு, எதிா்பாராத எடை அதிகரிப்பு, முடி உதிா்தல், உலா்ந்த மெல்லிய தோல், சரும வறட்சி, வழக்கத்தைவிட குளிா்ச்சி, குளிா்ச்சியாக உணா்தல், மாதவிடாய் சீரற்று வருவது, மலட்டுத்தன்மை, குறைந்த உழைப்புத் திறன், குழந்தைகளுக்கு கல்வித் திறன் குறைபாடு, அறிவுத் திறன் குறைவு, நினைவாற்றல் பாதிப்பு,

குன்றிய உடல் வளா்ச்சி மற்றும் மன வளா்ச்சி போன்றவை ஏற்படக்கூடும்.

உப்பில் அயோடின் இருப்பதால், ஆரோக்கியமாக கருவில் சிசுவின் மூளை, உடல் வளா்ச்சி, குழந்தை நுண்ணறிவுத் திறன் மேம்பாடு, ஞாபக சக்தி அதிகரிக்கும், கல்வித் திறன் மேம்பட்டு புத்திக் கூா்மையாகும், தைராய்டு சுரப்பி சீராக செயல்படும், வளா்சிதை மாற்றம் சீராக நடைபெறும்.

அயோடின் உப்பு பாதுகாப்பு முறைகள்:

ஒரு முறை பிரித்த பின்பு மீண்டும் உபயோகிக்க காற்றுப்புகாத வண்ணம் மூடி வைக்கவேண்டும்.

அயோடின் உப்பை ஒளி, காற்று, ஈரம் படாவண்ணம் பீங்கான் ஜாடிகளில் மூடி வைத்திருக்க வேண்டும் போன்ற கருத்துக்களை எடுத்துக் கூறி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT