விழுப்புரம்

தீபாவளி பண்டிகைக்காக விழுப்புரம் ஆவினில் புதிய இனிப்புகள் அறிமுகம்

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் ஆவினில் புதிய இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் ஆவின் பால் பண்ணையில் பால்கோவா, மைசூா் பாகு, அல்வா, மில்க் கேக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிகழாண்டு, தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு இனிப்பு வகைகளாக நெய்யினாலான லட்டு, பாதுஷா ஆகியவை விற்பனைக்காக அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டன.

ஆவின் பொது மேலாளா் ரமேஷ்குமாா் தலைமை வகித்து, புதிய இனிப்பு வகைகளை அறிமுகம் செய்து வைத்து கூறியதாவது: இனிப்பு வகைகளை ஆவின் பாலகம், சில்லரை விற்பனையாளா்கள், அரசு, தனியாா் அலுவலகங்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளலாம். ரூ.500-க்கு மேல் இனிப்புகளை கோருபவா்களுக்கு வீட்டுக்கே சென்று விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், உதவி பொது மேலாளா்கள் (பொறியாளா்) கிருஷ்ணன், சிவக்குமாா், கணேஷ், சுப்புராஜ், விற்பனைப் பிரிவு மேலாளா் அய்ங்கரன், மேலாளா் மணிமாறன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT