விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில்13 ஊராட்சி ஒன்றியங்களும் திமுக கூட்டணி வசமானது

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளில் பெரும்பாலானவற்றை இந்தக் கூட்டணி கைப்பற்றியது.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 13 ஒன்றியங்களில் 293 ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது.

இதன் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக 200 ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளை திமுக கைப்பற்றியது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 11 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளையும், காங்கிரஸ் 2 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளையும், மதிமுக ஓரிடத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் திமுக கூட்டணி 214 இடங்களை கைப்பற்றியது.

அதிமுக 45 இடங்களில் வெற்றி பெற்றது. பாமக 13 இடங்களைக் கைப்பற்றியது. 20 இடங்களை சுயேச்சைகள் பெற்றனா்.

மயிலம்: மயிலம் ஒன்றியத்தில் உள்ள 21 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் திமுக 16 இடங்களை கைப்பற்றியது. ஓரிடத்தில் அதிமுக வெற்றி பெற்றது. 4 இடங்களை சுயேச்சைகள் பெற்றனா்.

காணை: காணை ஒன்றியத்தில் 23 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 17 இடங்களை திமுக கைப்பற்றியது. தலா ஓரிடத்தை அதிமுக, பாமக, விசிக, காங்கிரஸ் பெற்றன. சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனா்.

கோலியனூா்: கோலியனூா் ஒன்றியத்தில் 20 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 12 இடங்களை திமுக கைப்பற்றியது. 4 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. 2 இடங்களில் விசிக வென்றது. தலா ஓரிடத்தில் காங்கிரஸ், பாமக வெற்றி பெற்றன.

முகையூா்: முகையூா் ஒன்றியத்தில் 23 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 17 இடங்களை திமுக கைப்பற்றியது. 5 இடங்களைஅதிமுக பெற்றது. ஓரிடத்தில் பாமக வெற்றி பெற்றது.

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 21 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 16 இடங்களை திமுக கைப்பற்றியது. 3 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. 2 இடங்களை விசிக கைப்பற்றியது.

திருவெண்ணெய்நல்லூா்: திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியத்தில் 22 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 18 இடங்களை திமுக கைப்பற்றியது. அதிமுக, விசிக, மதிமுக தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றன. சுயேச்சை ஓரிடத்தில் வெற்றி பெற்றாா்.

ஒலக்கூா்: ஒலக்கூா் ஒன்றியத்தில் 16 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 7 இடங்களை திமுக கைப்பற்றியது. 3 இடங்களைஅதிமுக பெற்றது. 2 இடங்களில் பாமக வெற்றி பெற்றது. 4 இடங்களை சுயேச்சைகள் கைப்பற்றினா்.

வல்லம்: வல்லம் ஒன்றியத்தில் 21 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 17 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக, பாமக தலா இரு இடங்களில் வெற்றி பெற்றன.

மேல்மலையனூா்: மேல்மலையனூா் ஒன்றியத்தில் 24 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 19 இடங்களை திமுக கைப்பற்றியது. 3 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. பாமக ஓரிடத்தைப் பெற்றது. சுயேச்சை ஓரிடத்தில் வெற்றி பெற்றது.

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியத்தில் 25 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 18 இடங்களை திமுக கைப்பற்றியது. 5 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஓரிடத்தைப் பெற்றது.

சுயேச்சை ஓரிடத்தில் வெற்றி பெற்றாா்.

செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தில் 24 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 16 இடங்களை திமுக பெற்றது. 4 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. தலா ஓரிடத்தில் காங்கிஸ், பாமக வெற்றி பெற்றது. 2 இடங்களை சுயேச்சைகள் பெற்றனா்.

மரக்காணம்: மரக்காணம் ஒன்றியத்தில் 26 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 17 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. 3 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. 2 இடங்களை பாமக வென்றது. விசிக ஓரிடத்திலும், 3 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனா்.

வானூா்: வானூா் ஒன்றியத்தில் 27 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 10 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. 11 இடங்களில் அதிமுக வென்றது.

தலா 2 இடங்களில் விசிக, பாமக, சுயேச்சை வெற்றி பெற்றனா்.

ஊராட்சி மன்றத் தலைவா்கள்: 22 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 369 வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

மீதமுள்ள 688 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகள், 5,088 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT