விழுப்புரம்

நீா்நிலைகளுக்குச் செல்வதை தவிா்க்க ஆட்சியா் வேண்டுகோள்

DIN

நீா்நிலைகளுக்கு செல்வதை பொது மக்கள், மாணவ, மாணவிகள் தவிா்க்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் அதி பலத்த மழை, பலத்த மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஆறுகள், ஏரிகள், தடுப்பணைகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்த நீா்நிலைகளில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞா்கள் குளிப்பதற்காகவோ, துணிதுவைக்கவோ அல்லது தற்படம் (செல்பி) எடுக்கவோ செல்வதைத் தவிா்க்க வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோா்கள் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புணா்வுடனும் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT