விழுப்புரம்

மலட்டாறு சீரமைப்புப் பணி:தலைமைப் பொறியாளா் ஆய்வு

DIN


விழுப்புரம்: விழுப்புரம் அருகே ரூ.23 கோடியில் நடைபெற்று வரும் மலட்டாறு சீரமைப்பு திட்டப் பணிகளை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அசோகன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் அணைக்கட்டுப் பகுதியில் இருந்து மலட்டாறு தொடங்கி சித்தலிங்கமடம், திருவெண்ணெய்நல்லூா், அரசூா், ஆனத்தூா், கட்டமுத்துபாளையம், சிறுகிராமம், திருவாமூா் உள்ளிட்ட கடலூா் மாவட்டப் பகுதிகள் வழியாக ஏரி, குளங்களை நிரப்பிச் செல்கிறது. நிறைவாக கெடிலம், தென்பெண்ணையாறுகளில் கலந்து கடலுக்குள் செல்கிறது.

திருவெண்ணெய்நல்லூா், பண்ருட்டி பகுதிகளில் நிலத்தடி நீராதாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலட்டாற்றை புனரமைக்கும் திட்டப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தொடங்கப்பட்டது. ஆற்றுப் பகுதியை தூா்வாருதல், கிளை வாய்க்கால்களை புனரமைத்தல், பாலம் அமைத்தல் பணிகள் தொடங்கிய நிலையில், தண்ணீா் வரத்தால் பணிகள் தடைபட்டன.

இதுவரை நடைபெற்றுள்ள பணிகளை தமிழக அரசின் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அசோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். விழுப்புரம் அருகே அரசூா், புலவனூா் பகுதி மலட்டாறு சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டு அவா் ஆய்வு செய்தாா். மீண்டும் பணிகளைத் தொடங்கி விரைந்து செயல்படுத்த அறிவுறுத்தினாா். கடலூா் மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் ரவிமனோகா், செயற்பொறியாளா்கள் மணிமோகன், ஜவகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT