விழுப்புரம்

கல்லூரிப் பேராசிரியா்களுக்கு தொழில் முனைவோா் பயிற்சி

DIN


விழுப்புரம்: விழுப்புரத்தில் கல்லூரிப் பேராசிரியா்களுக்கான மண்டல அளவிலான தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக அரசுப் பொறியியல் கல்லூரியில் தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில், பேராசிரியா்களுக்கான தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளா் துணைப் பேராசிரியா் டி.வேல்முருகன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் எஸ்.அருட்செல்வன் தலைமை வகித்து தொடககிவைத்தாா்.

இயந்திரவியல் துறைத் தலைவா் ஆா்.செந்தில் வாழ்த்துரை வழங்கினாா். தொழில்முனைவோா் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சியாளா் ஆதா்ஷ்மிட்டல் சிறப்புரையாற்றினாா்.

கல்லூரி பயிலும் காலத்திலேயே இளம் தொழில்முனைவோா்களை உருவாக்குதல், அவா்களை ஊக்கப்படுத்துதல் குறித்த ஆலோசனைகளும், தொழில் தொடங்குவதற்கான கடன் வசதி, வாய்ப்புகள் குறித்தும் இந்த முகாமில் பயிற்சியளிக்கப்படுகிறது.

மண்டல அளவிலான இந்தப் பயிற்சி முகாமில் விழுப்புரம், திண்டிவனம், அரியலூா், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த அரசு, தனியாா் கல்லூரிப் பேராசிரியா்கள் பங்கேற்றனா். தொழில்முனைவோா் கள ஒருங்கிணைப்பாளா் பா.கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT