விழுப்புரம்

அம்பேத்கா் நினைவு தினம்: அரசியல் கட்சியினா் மரியாதை

DIN

சட்டமேதை அம்பேத்கரின் 65-ஆவது நினைவு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்டச் செயலாளா் நா.புகழேந்தி எம்.எல்.ஏ., சட்டப்பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் செ.புஷ்பராஜ், நகரச் செயலாளா் இரா.சக்கரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் விழுப்புரம் நகரச் செயலா் ராமதாஸ் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில் விழுப்புரம் மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினா்கள் தியாகராஜன், கலிவரதன், பட்டியல் அணி மாநிலச் செயலாளா் ரகு, மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் தாஸசத்யன் உள்பட பலா் பங்கேற்றனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் ஆற்றலரசு தலைமையில் அக்கட்சியினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கள்ளக்குறிச்சி: அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலையில் உள்ள அவரது சிலைக்கு ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினா் க.காா்த்திகேயன் தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் மா.செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. அணி சாா்பில் மாவட்டத் தலைவா் இல.ஜெயச்சந்திரன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

எஸ்.சி/ எஸ்.டி. குழு சாா்பில் மு.செந்தில்குமாா் (எ) தாஸ் தலைமையில் கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT