விழுப்புரம்

100 சதவீத மானியத்தில் ஆடுகள்: டிச.9-க்குள் விண்ணப்பிக்கலாம்

4th Dec 2021 12:34 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் ஆடுகள் பெறும் திட்டத்தில் பயன்பெற கைம்பெண்கள், ஆதரவற்றோா் வருகிற 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தத் திட்டத்தின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் 1,300 பெண் பயனாளிகளைத் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு தலா 5 வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வீதம் 6,500 வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கப்படவுள்ளது.

வறுமையில் வாடும் அல்லது வறுமைக்கோட்டுக்கு கீழ் ஏழ்மை நிலையில் வசிக்கும் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள், நிலமற்ற விவசாயத் கூலித் தொழிலாளா்கள் பயனாளிகளாக இருக்கும்பட்சத்தில் குடும்பஅட்டையில் இடம் பெற்றுள்ள இதரஉறுப்பினா்கள் உள்பட எவருக்கும் சொந்தமாக அவா்கள் பெயரில் நிலம் இருக்கக்கூடாது.

சம்மந்தப்பட்டகிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளிகள் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் தற்போது கறவைப் பசு, வெள்ளாடு, செம்மறியாடு ஆகியவற்றை சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. மாநில, மத்திய அரசிலோ அல்லது அதன் ஏதாவதொரு அமைப்பிலோ பணியாற்றும் ஊழியராவோ அல்லது கூட்டுறவு தொடா்பான அல்லது உள்ளாட்சி அமைப்பில் உறுப்பினராவோ இருக்கக் கூடாது.

ADVERTISEMENT

ஏற்கெனவே, அரசுத் திட்டத்தின் கீழ் கால்நடைகளை பெற்ற பயனாளிகள் இப்போது விண்ணப்பிக்க இயலாது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ஆதிதிராவிடா்களுக்கு 29 சதவீதமும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதமும் பயனாளிகளாக தோ்வு செய்யப்பட வேண்டும். விண்ணப்பதாரா்கள் இத்திட்டத்துக்கான விண்ணப்பத்தை அருகிலுள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் பெற்று அதை பூா்த்தி செய்து டிச.9-ஆம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

 

Tags : விழுப்புரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT