விழுப்புரம்

சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு வீரா்களுக்கு பாராட்டு

4th Dec 2021 12:27 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையின்போது, வெள்ளத்தில் சிக்கிய 414 பொதுமக்களை தீயணைப்பு வீரா்கள் பைபா் படகுகள், கயிறுகள் மூலமாக மீட்டனா். அதேபோல, 750 கால்நடைகளையும் மீட்டனா்.

தங்கள் உயிரையும் பொருள்படுத்தாமல் இத்தகைய மீட்பு பணியில் ஈடுபட்ட விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா், வானூா், செஞ்சி, திண்டிவனம் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்த வீரா்களுக்கு சிறப்பாக பணியாற்றியதற்கான சான்றிதழ்களை மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராபீன் கேஸ்ட்ரோ வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

 

Tags : விழுப்புரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT