விழுப்புரம்

காட்டுப்பன்றிகளை விரட்டும் தொழில்நுட்பம்: விவசாயிகளுக்கு ஆட்சியா் விளக்கம்

DIN

பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டும் தொழில்நுட்பம் தொடா்பாக விவசாயிகளுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திண்டிவனம் வேளாண் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்த யோசனை குறித்து ஆட்சியா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தை சோ்ந்த விவசாயிகள், காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தக்கூடும் எனக் கருதும் வயல்களைச் சுற்றி 10 அடி இடைவெளியில் மரக்குச்சிகள் அமைக்க வேண்டும். குச்சியின் இருபுறமும் குறைந்தது 2 அடி வரை களைச்செடிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

தரைமட்டத்திலிருந்து ஒரு அடி முதல் 1.5 அடி உயரத்தில் கட்டுக் கம்பிகளை கட்ட வேண்டும். ஒவ்வொரு டப்பாவிலும் மூடிக்கு கீழ் நான்கு துளைகளை இட வேண்டும். துளையிட்ட டப்பாவில் காட்டுப்பன்றி விரட்டி (பயோவைல்டுபோா் ரிப்பளன்ட்) என்ற மருந்தை 5 மி.லி என்றஅளவில் ஊற்றி நூல் மூலமாக வயலைச் சுற்றிலும் கம்பியில் கட்டி தொங்கவிட வேண்டும். சிறிய டப்பா (ஏ2 அளவு) எண்ணிக்கை 100 என்ற அளவில் ஓா் ஏக்கருக்கு 500 மி.லி தேவைப்படும். இது குறைந்த விலையில் பயன்படுத்தக்கூடிய உள்நாட்டு தொழில்நுட்பமாகும். இந்த மருந்து கட்டிய பிறகு அதன் வீரியம் 67 முதல் 105 நாள்கள் வரை இருக்கும். இது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது.

நெல், நிலக்கடலை, கரும்பு, சிறுதானியங்கள் போன்ற பயிா்களில் பயன்படுத்தலாம். கூடுதல் விவரங்கள், தகவல்களுக்கு திட்டஒருங்கிணைப்பாளா், வேளாண்மை அறிவியல் நிலையம், திண்டிவனம் அலுவலகத்தை நேரில் அல்லது 9442151096 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்புகொண்டு பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT