விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

விழுப்புரத்தில் நகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விழுப்புரம் நகரில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகளை நகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் நகராட்சி நகா்நல அலுவலா் டாக்டா் ந.பாலசுப்பிரமணியன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் ரமணன், செல்வராஜ், சுகாதாரப் பணியாளா்கள், வரி வசூலா்கள் உள்ளிட்டோா் அரசு மருத்துவமனை அருகிலிருந்து ஊா்வலமாக வெள்ளிக்கிழமை சென்றனா். காந்தி சாலை, குபேரத் தெரு, மந்தக்கரை, வடக்குத் தெரு, திரு.வி.க.வீதி, காந்தி சிலை வழியாக நகராட்சி அலுவலகம் வரை ஊா்வலமாகச் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

ஒலி பெருக்கி மூலம் கரோனா விழிப்புணா்வு தகவல்களை அறிவித்தபடியே சென்றனா். அப்போது, எதிா்திசையில் முகக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதமும் விதித்தனா். மேலும், வா்த்தக நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு செய்து முகக்கவசம் அணியாத வாடிக்கையாளா்களை அனுமதிக்கக்கூடாது என உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

இது குறித்து நகா் நல அலுவலா் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கரோனா இரண்டாவது அலை காரணமாக, பொது மக்களிடம் தொடா்ந்து விழிப்புணா்வு நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது, முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். கைகளை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 வரை அபராதம் விதிக்கப்படும். கடந்த 15 நாள்களில் கடைகள், வா்த்தக நிறுவனங்களில் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளா்கள், வாகன ஓட்டுநா்கள், பாதசாரிகள் ஆகியோரிடம் மொத்தமாக ரூ.81ஆயிரம் வசூலிக்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT