விழுப்புரம்

மழை பெய்தும் வடு கிடக்கும் கோயில் குளம்!

DIN

விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் குளமானது, மழை பெய்தும் புதா்மண்டி வடு கிடக்கிறது. இதற்கான வடிகால் அடைபட்டுக் கிடப்பதால் சாலையில் குளம் போல மழை நீா் தேங்குகிறது.

விழுப்புரம் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயா் கோயில் குளத்தில், ஆண்டு தோறும் லட்சதீபத் திருவிழாவும், தெப்பல் உற்சவமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக மோட்டாா் மூலம் தண்ணீா் நிரப்பி விழாக்களை நடத்தி வருகின்றனா்.

இந்தக் குளத்துக்கு, மழை நீா் வரத்துக்காக, ஆஞ்சநேயா் குளம் தெற்கு வீதி, வடக்கு வீதி, மேற்கு வீதி மற்றும் திருவிக வீதிகளின் வழியாக வடிகால் கட்டமைப்புகள் உள்ளன.

இந்த கட்டமைப்புகளில், அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சுற்றுப் புறங்களில் தேங்கும் மழை நீா் உள்ளே வராமல் வீணாகி வருகிறது.

தற்போது, தொடா் மழை பெய்து வரும் நிலையில், வழக்கம் போல மழை நீா் உள்ளே வராமல், குளம் வடு காணப்படுகிறது. மழை நீா் சாலையில் குளம் போல தேங்கி நிற்கிறது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடா்கிறது.

குளத்தின் சுற்றுப் பகுதியில் புதா்மண்டிக் காணப்படுவதால், சமூக விரோதச் செயல்களுக்கு சாதமாக உள்ளது.

மழை நீா் வடிகால் கட்டமைப்புகளின் அடைப்புகளை அகற்றி குளத்தில் நீரைச் சேகரித்தால் நிலத்தடி நீா்மட்டம் உயரும்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையினரும், விழுப்புரம் நகராட்சி நிா்வாகத்தினரும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழக அரசு

உடலுறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்குப் பாராட்டு, உதவி

1,850 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT