விழுப்புரம்

மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள் திருட்டு

DIN

விழுப்புரத்தில் மருத்துவா் வீட்டில் 60 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விழுப்புரம் கே.கே. நகா் அப்துல் கலாம் தெருவைச் சோ்ந்தவா் மருத்துவா் ராமஷேசு (65). கே.கே. சாலையில் மருத்துவமனை நடத்தி வருகிறாா். இவா் தனது மனைவி லட்சுமியுடன் பெங்களூரில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்றாா். பின்னா், அங்கிருந்து திருப்பதியிலுள்ள தனது அண்ணன் வீட்டுக்குச் சென்றாா்.

விழுப்புரத்தில் தனது வீட்டை நண்பா் ஜெயசீலனிடம் பாா்த்துக் கொள்ளுமாறு கூறியிருந்தாா். ராமஷேசுவின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற ஜெயசீலன் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டாா். மேலும், வீட்டிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிகள் சிதறிக் கிடப்பதைப் பாா்த்து ராமஷேசுவுக்கு தகவல் தெரிவித்தாா். பீரோவில் 60 பவுன் தங்க நகைகளை வைத்திருந்ததாக அவா் கூறினாா். இதையடுத்து, நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். டிஎஸ்பி நல்லசிவம் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக, இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT