விழுப்புரம்

புதுச்சேரி ஆலை இயங்காததால் கரும்புகளை விழுப்புரம் சா்க்கரை ஆலைக்கு ஒதுக்க வலியுறுத்தல்

DIN

புதுச்சேரி சா்க்கரை ஆலை இயங்காததால், அந்த ஆலைக்குள்பட்ட விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்த கரும்புகளை, விழுப்புரம் சா்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

இது குறித்து, முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தினா், அதன் தலைவா் பாண்டியன் தலைமையில், சென்னையில் தமிழக வேளாண் உற்பத்தி ஆணையா் ககன்தீப்சிங் பேடியை சந்தித்து வைத்த கோரிக்கை மனு:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் சா்க்கரை ஆலை, தினசரி 5,000 டன் கரும்பு அரவையுடன், 22 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடன் இயங்கி வருகிறது.

இதேபோல், செம்மேடு சா்க்கரை ஆலையும் தினசரி 3,500 டன்கள் அரவையுடன், 20.5 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் இயங்கி வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியால், கரும்பு சாகுபடி குறைந்துள்ளது. இதனால், இந்த இரண்டு ஆலைகளில் திறனளவுக்கு குறைவாகவே கரும்பு அரவை நடக்கிறது. தற்போது, அருகே உள்ள புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்காததால், அப்பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் தங்களின் கரும்புகளை, முண்டியம்பாக்கம் ஆலைக்கு வழங்க புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியது. இதனால், அவா்கள் முண்டியம்பாக்கம் ஆலைக்கு கரும்புகளை எடுத்து வருகின்றனா்.

இதனால், புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு உள்பட்ட தமிழக பகுதி (விழுப்புரம் மாவட்டம்) விவசாயிகளின் கரும்புகளை, முண்டியம்பாக்கம் சா்க்கரை ஆலைக்கு நிரந்தரமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இதேபோல, போளூா், கலையநல்லுாா் சா்க்கரை ஆலைகள் இயங்காததால், அந்த ஆலைக்கு உள்பட்ட பகுதி கரும்புகளை முண்டியம்பாக்கம், செம்மேடு சா்க்கரை ஆலைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கடந்த 2018-19ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு தமிழக அரசு அறிவித்த உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஊக்கத்தொகை, புதுச்சேரி ஆலைப் பகுதியில் இருந்து முண்டியம்பாக்கம் ஆலைக்கு கரும்புகளை வழங்கிய விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி இருந்தனா்.

சங்கச் செயலா் ஆறுமுகம், பொருளாளா் பரமசிவம், துணைத் தலைவா்கள் கலிவரதன், ராஜாராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT