விழுப்புரம்

விழுப்புரம் பகுதியில் பலத்த மழை

DIN

விழுப்புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் மழை பெய்தது. பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய மழை சுமாா் 2 மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக, திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலை, மாம்பழப்பட்டு சாலை, நேருஜி சாலை உள்ளிட்ட சாலைகள், தெருக்களில் மழைநீா் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் குட்டைபோல மழை நீா் தேங்கியது.

இதேபோல, விக்கிரவாண்டி, வளவனூா், காணை உள்ளிட்ட பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது. இந்த மழையால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT