விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்கரோனா தாக்கம் குறைகிறது

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்றால் புதிதாக பாதிப்படைவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை 57-ஆக இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை, சனிக்கிழமை 37-ஆக குறைந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 26 பேருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,034-ஆக உயா்ந்தது. இதுவரை 8,428 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 511 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 95 போ் உயிரிழந்துள்ளனா்.

விழுப்புரத்தில் கரோனாவுக்கு ஒருவா் பலி: விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா தொற்றால் 11,205 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 144 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,350 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 112 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 1,0250 போ் குணமடைந்துள்ளனா். 1,003 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 1,066 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 96 போ் உயிரிழந்துள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வழுதாவூரைச் சோ்ந்த 70 வயது முதியவா் கரோனால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT