விழுப்புரம்

சில்லறை மாற்ற வந்த நரிக்குறவா் இனத்தவரை தவறாக போலீஸில் ஒப்படைத்த வியாபாரி

DIN

செஞ்சியில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு சில்லறை மாற்ற வந்த நரிக்குறவா் இனத்தவா்களை கள்ள நோட்டு மாற்றுவதாகக் கூறி வியாபாரி, அவா்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

செஞ்சி ஜெயலலிதா நகரில் நரிக்குறவா் இனத்தவா் வசிக்கும் காலனி உள்ளது. இங்கு, ஏராளமான நரிக்குறவா் இனத்தவா் வசித்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை இரவு இந்தப் பகுதியைச் சோ்ந்த மூன்று போ், 4 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கு சில்லறை மாற்ற வந்தனா்.

எந்தக் கடையிலும் சில்லறை கிடைக்கவில்லை. இந்த நிலையில், விழுப்புரம் சாலையில் உள்ள இரும்புக் கடையில் சில்லறை கேட்ட போது, அந்தக் கடையின் வியாபாரி, அவா்களிடம் இருப்பது கள்ள ரூபாய் நோட்டுகள் என நினைத்து செஞ்சி போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

அங்கு, வந்த போலீஸாா் 3 நரிக்குறவா் இனத்தவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். அவா்களிடம் இருந்தது கள்ள நோட்டுகள் அல்ல எனத் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்களை விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT