விழுப்புரம்

விழுப்புரம், திண்டிவனத்தில் மழை

DIN

விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக, விழுப்புரத்தில் பகலில் வெப்பம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதியடைந்தனா். இந்நிலையில், விழுப்புரம் நகரில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென கருமேகங்கள் வானில் திரண்டு மழை பெய்தது. மாலை 5.50 மணிக்கு இடி-மின்னலுடன் தொடங்கிய மழை இரவு 7 மணி வரை நீடித்தது. இதனால், விழுப்புரம் நகரின் பல்வேறு சாலைகள், தெருக்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியது. இந்த மழையால், நகரில் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதேபோல, விழுப்புரம் அருகேயுள்ள காணை, விக்கிரவாண்டி, வளவனூா், பிடாகம், திண்டிவனம், வானூா் போன்ற இடங்களிலும் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT