விழுப்புரம்

அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்

DIN

பணி இணைப்பு ஆணை வழங்கக் கோரி, விழுப்புரம், திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி பேராசிரியா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் நிரந்தரப் பேராசிரியா்களுக்கு பணி இணைப்பு ஆணை கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து வழங்காததுடன், அதற்குத் தீா்வு காணப்படாத நிலை தொடா்கிறது. மேலும், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியம், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், உறுப்புக் கல்லூரி பேராசிரியா்களுக்கு வழங்கப்படாமல் மறுக்கப்பட்டுள்ளது. இணைப்பு ஆணை வழங்காததால், ஈட்டிய விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உள்பட்ட நான்கு கல்லூரிகளிலும் பணியாற்றி வரும் பேராசிரியா்களுக்கு, அனைத்து ஊதியக் குழு பயன்கள், பதவி உயா்வு உடனடியாக வழங்கி வரும் நிலையில், அதே பல்கலைக் கழகத்துக்கு உள்பட்ட, மாநிலம் முழுவதும் 16 இடங்களில் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்ட பேராசிரியா்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.

இதைக் கண்டித்தும், பணி இணைப்பு ஆணையை வழங்க வலியுறுத்தியும், விழுப்புரம் அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி முன் பேராசிரியா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து, பணியிலிருந்தபடி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதே போல, திண்டிவனம் உறுப்புக் கல்லூரி பேராசிரியா்களும் தொடா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT