விழுப்புரம்

மயிலம் அருகே குடிநீா் குழாயில் உடைப்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் வெளியேறி சாலையோரம் குட்டை போல தேங்கியுள்ளது.

விழுப்புரம் அருகேயுள்ள பூவரசங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து, புதைவழி குழாய் மூலம் மயிலம் வழியாக திண்டிவனம் நகராட்சிக்கு குடிநீா் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனிடையே, வீடூா் அணைப் பகுதியில் மிகப்பெரிய நீா்த் தேக்கத் தொட்டியில் தண்ணீா் சேமிக்கப்பட்டு, அங்கிருந்து திண்டிவனத்துக்கு குழாய் வழியாகச் செல்கிறது. வழியில், மயிலம்-பாதிராப்புலியூா் சாலையோரம் இந்த குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தண்ணீா் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீா் அப்பகுதியில் பெரிய குட்டையாக தேங்கியுள்ளது. சாலையோரம் காலைக்கடன் கழிக்கும் சிலா், அந்த நீரை அசுத்தம் செய்கின்றனா். அந்த கழிவு நீா் மீண்டும் குழாயில் உள்ளிழுத்துச் செல்லும் நிலை உள்ளது. மேலும், சாலையோரமுள்ள இந்த குட்டையில், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது.

ஆகவே, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையினா் இந்த குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT