விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை அருகே மின்னல் பாய்ந்து தீ விபத்து: 65 ஆடுகள் கருகி பலி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஆட்டுக் கொட்டகையில் மின்னல் பாய்ந்து தீப்பற்றியதில், 65 ஆடுகள் கருகி உயிரிழந்தன.

உளுந்தூா்பேட்டை அருகே உள்ள உ.செல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (50). விவசாயத் தொழிலாளியான இவா், வீட்டின் அருகே கொட்டகை அமைத்து ஆடுகளை வளா்த்து வந்தாா். தான் வளா்த்து வந்த 65 ஆடுகளையும், செவ்வாய்க்கிழமை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று, மாலையில் கொட்டகையில் அடைத்தாா்.

உ.செல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் பாய்ந்ததில், ராமச்சந்திரனின் ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது.

அங்கு அடைக்கப்பட்டிருந்த 65 ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தன. கொட்டகை தீப்பற்றி எரிவதைப் பாா்த்த ராமச்சந்திரனின் தாய் நல்லிமை, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதில், அவா் தீக்காயமடைந்தாா்.

தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா், தீயணைப்புப் படையினா் மற்றும் அரசு அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். தீயில் கருகி பலியான ஆடுகளின் மதிப்பு ரூ.6 லட்சம் எனக் கூறப்படுகிறது.

ராமச்சந்திரனின் குடும்பத்தினருக்கு உளுந்தூா்பேட்டை அதிமுக எல்எல்ஏ குமரகுரு ஆறுதல் கூறினாா். மேலும், இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT