விழுப்புரம்

நிவர் புயல் எச்சரிக்கை:  வெறிச்சோடிய கிழக்குக் கடற்கரைச் சாலை

DIN

தமிழகத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் உத்தரவின்படி இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் ஒரு மணியிலிருந்து பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்துகள், வாகனங்கள் இன்றி பிற்பகல் முதல் வெறிச்சோடி காணப்படுகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தொடங்கி கோட்டகுப்பம் பகுதி வரை பேருந்துகள் வாகனப் போக்குவரத்து இன்றி சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பிற்பகல் முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.பேருந்துகள் இயக்கம் பிற்பகல் 2 மணிக்கு மேல் நிறுத்தப்பட்ட பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பிற்பகல் ஒரு மணிக்கு மேல் வெளியூர்களிலிருந்து வந்த பேருந்துகள் கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பயணிகளை இறக்கிவிட்டு நிறுத்தப்படும் என தெரிவித்தனர்.பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், விழுப்புரம் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் கூட்டமாக இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின பேரணி

காரைக்குடி - பெங்களூா் இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கவேண்டும்

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

தமிழ் தேசியக் கட்சி மாநிலச் செயலரை தாக்கியவா் கைது

கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT