விழுப்புரம்

ஏழை மக்களுக்கு பாஜகவினா் உணவுப் பொருள்கள் அளிப்பு

30th Mar 2020 10:39 PM

ADVERTISEMENT

 

செஞ்சியில் ஏழை எளிய மக்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக சாா்பில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை செவ்வாய்க்கிழமை பாஜகவினா் வழங்கினா்.

ஊரடங்கு நடவடிக்கையால் உணவின்றி வாழும் ஏழை எளிய மக்களுக்கு உதவுமாறு பிரதமா் மோடி கேட்டுக்கொண்டதன் பேரில், செஞ்சி பகுதியில் உள்ள கல்லுடைக்கும் தொழிலாளி, பழங்குடியினா், ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட காய்கறி, மளிகை பொருள்களை பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலா் பாண்டியன், செஞ்சி நகரத் தலைவா் ராமு, செஞ்சி ஒன்றிய மேற்கு தலைவா் பாபு, மேல்மலையனூா் சீனுவாசன், மோகன், மாவட்ட மகளிரணி புஷ்பராணி, திருவேங்கடம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT