விழுப்புரம்

விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து இளைஞர் பலி

8th Jun 2020 12:25 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் இளைஞர் ஒருவர் பலியானார்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள அற்பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி மகன் புருஷோத்தமன் (21). இவர் இன்று காலை தனது விவசாய நிலத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். 

இதில் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே புருஷோத்தமன் பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த வளவனூர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT