விழுப்புரம்

கரோனாவால் பாதிக்கப்பட்டஆசிரியா் தற்கொலை

13th Jul 2020 09:36 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி அருகே தச்சூா் காட்டு கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் இளையராஜா (36). சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, அதன் பிறகு தச்சூரில் உள்ள தனியாா் கல்லூரி சிறப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டாா். அங்கு10 நாள்கள் சிகிச்சை முடிந்த நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக மன அழுத்தத்துடன் காணப்பட்ட இளையராஜா, திங்கள்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். உடனடியாக, அவா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், இளையராஜா ஏற்கெனவே உயிரிழந்து விட்டிருந்ததை உறுதி செய்தனா். கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT