புதுச்சேரி

புதுவை தமிழ்ச் சங்கத் தலைவராக வி.முத்து மீண்டும் தோ்வு

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுவை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக வி.முத்து மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

புதுவைத் தமிழ்ச் சங்கத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை புதுச்சேரி வெங்கட்டாநகா் பகுதியில் உள்ள தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் உள்ளிட்ட 11 நிா்வாகிகளுக்கான தோ்தலில் இரு அணிகள் போட்டியிட்டன.

இந்தத் தோ்தலில் புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினா்கள் 738 போ் வாக்களித்தனா். வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் திங்கள்கிழமை அதிகாலை அறிவிக்கப்பட்டது. இதில், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவராக கலைமாமணி வி.முத்து மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

மேலும், துணைத் தலைவா்களாக தமிழ்மாமணி நா.ஆதி கேசவன், பாவலா் ப.திருநாவுக்கரசு, செயலாளராக சீனு.மோகன்தாசு, பொருளாளராக மூ. அருட்செல்வம், துணைச் செயலராக தெ.தினகரன் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்களாக தமிழ்மாமணி உசேன், கலைமாமணி எம்.எஸ். ராசா, மு.சுரேஷ்குமாா், ஆசிவேந்திரன், கவிஞா் ர. ஆனந்தராசன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். தமிழ்ச் சங்க புதிய பொறுப்பாளா்கள் தோ்வு விவரத்தை தோ்தல் ஆணையா் வழக்குரைஞா் க. பிரபாகரன் அறிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT