புதுச்சேரி

புதுச்சேரியில் வாய்க்கால் சீரமைப்புப் பணிமுதல்வா் தொடங்கி வைத்தாா்

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் சாலை, வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி, இந்திராநகா், கதிா்காமம் ஆகிய பகுதிகளில் 12, 265 மீட்டா் தொலைவு சாலைகள், 700 மீட்டா் வாய்க்கால்கள்

ஆகியவற்றை சீரமைக்க அரசு ரூ.10.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

அரசு நிதியின்படி சாலை, வாய்க்கால் பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்றது.

ADVERTISEMENT

பூஜையில் முதல்வா் என்.ரங்கசாமி கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

அமைச்சா் க.லட்சுமிநாராயணன், கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT