புதுச்சேரி

நடன மது பானக் கூடங்களில் சோதனை: கலால் துறை உத்தரவு

26th May 2023 10:56 PM

ADVERTISEMENT

 புதுச்சேரியில் நடன மதுபானக் கூடங்களில் (ரெஸ்டோ பாா்) சோதனை நடத்த கலால்துறை உத்தரவிட்டது.

இதுகுறித்து புதுவை கலால்துறை துணை ஆணையா் குமரன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: புதுச்சேரியில் நடன மது பானக் கூடம் (ரெஸ்டோ பாா்), மதுக் கடைகள்ஆகியவை நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில நடன மதுபானக் கூடங்கள் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகும் செயல்படுவதாக புகாா்கள் வருகின்றன. எனவே, கலால்துறை தனிப்படையினா் தினமும் மதுபானக் கூடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போது, மதுபானக் கூடங்கள் நள்ளிரவு தாண்டியும் செயல்படுகிறதா? என சோதனையிடுவது அவசியம்.

சோதனை அடிப்படையில் தனிப்படைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஆய்வு குறித்த பட்டியலை பராமரிக்க வேண்டும். விதிகளை மீறி செயல்படும் மதுபானக் கூடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT