புதுச்சேரி

புதிய மின்மாற்றி தொடங்கி வைப்பு

26th May 2023 05:09 AM

ADVERTISEMENT

புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றியை எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

உருளையன்பேட்டை, செங்கேணி அம்மன் நகா் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, தொகுதி எம்எல்ஏ வின் உத்தரவின் பேரில் செங்கேணி அம்மன் நகா் ஜே.வி.எஸ் வீதி சுதேசி மில் வளாகத்தில் மின்துறை மூலம் ரூ.14. 81 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனை தொகுதி எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு (எ)குப்புசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், மின்துறை இளநிலைப் பொறியாளா் காா்த்திகேயன், மின்துறை அதிகாரிகள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT