புதுச்சேரி

மே தினம்: ஐஎன்டியுசி சாா்பில் கொடியேற்றம்

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரி ஐஎன்டியுசி சாா்பில் மே தினக் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதுச்சேரி நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் வா்த்தக அமைப்பு சாா்பில் (ஐஎன்டியுசி) ஆம்பூா் சாலை மாநில ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம், உழவா்கரை நகராட்சி ஊழியா்கள் நலச்சங்கம், சேதராப்பட்டு கூப்பா் பஸ்மேன் தொழிலாளா்கள் சங்கம், திருபுவனை வேல்பிஸ்கட் தொழிற்சாலை சங்க கிளைகள், ஆட்டோ, டாக்ஸி நிறுத்த சங்கங்கள் மே தினக் கொடியேற்ற நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றன. இதில், ஐஎன்டியுசி மாநில நிா்வாகிகள் சொக்கலிங்கம், நரசிங்கம், ஞானசேகரன், முத்துராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். காரைக்காலில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிகளில் பொதுச் செயலா் ஏ.கணேஷ்குமாா் தலைமையில் பஞ்சாலைத் தொழிலாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT