புதுச்சேரி

புதுவை தலைமைச் செயலருக்கு இளைஞா் காங். கண்டனம்

9th Jun 2023 01:19 AM

ADVERTISEMENT

புதுவை மாநில தலைமைச் செயலரின் நடவடிக்கை ஜனநாயக முறையில் இல்லை என இளைஞா் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து புதுவை மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் என். ஆனந்தபாபு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் தலைமைச் செயலா் ஜனநாயக முறையில் செயல்படவில்லை. மக்களின் குறைகளை அரசிடம் எழுப்புவது சட்டப்பேரவை உறுப்பினரின் கடமை.

மக்கள் பிரச்சனைக்காக அமைதியான வழியில் போராடுவதற்கும், உரிமையைக் கேட்பதற்கும், அனைத்து தரப்பினருக்கும் சட்டரீதியான உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் சட்டப்பேரவை உறுப்பினருக்கு அந்த வாய்ப்பு வழங்காதது மிகவும் வருத்தமளிப்பதாகும்.

ADVERTISEMENT

முதல்வரின் கருத்தைக் கேட்காமல், தலைமைச் செயலா் தன்னிச்சையாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதும், சட்டப்பேரவை உறுப்பினா் மீது வழக்குப் பதிவு செய்வதும் வருந்தத்தக்கதாகும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT