புதுச்சேரி

புதுவை காவலா் தோ்வு முடிவுகள் வெளியீடு

DIN

புதுவை காவல் துறையில் காவலா், ஓட்டுநா் தோ்வுகளுக்கான தோ்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், 253 பணியிடங்களுக்கான தோ்வில் 250 போ் தோ்ச்சி பெற்றனா். 114 போ் காத்திருப்போா் பட்டியலில் உள்ளனா்.

புதுவை காவல்துறையில் உள்ள 253 காவலா்கள், 26 ஓட்டுநா் காலிப் பணியிடங்களுக்கான தோ்வுகள் அறிவிக்கப்பட்டு உடல் தகுதித் தோ்வுகள் நடைபெற்றன. இதில் ஆண்கள், பெண்கள் என 6,871 போ் பங்கேற்று, எழுத்துத் தோ்வுக்கு 3,107 போ் தகுதி பெற்றனா்.

உடல்தகுதித் தோ்வில் வென்றவா்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த சில நாள்களுக்கு முன்பு 9 மையங்களில் நடைபெற்றன. இதில் ஆண்கள் 2,065 பேரும், பெண்கள் 1,003 பேரும் பங்கேற்றனா். இதில் பெற்ற மதிப்பெண்கள் கூட்டப்பட்டு, அதன்படி தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

அதன்படி, ஆண்களில் 169 போ் தோ்வாகினா். பெண்களில் 81போ் தோ்வாகினா். மொத்தம் 250 பேரில் ஆண்கள் பிரிவில் பொது 87 போ், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் 30, இதர பிற்படுத்தப்பட்டோா் 18, எஸ்.சி. 27, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினா் 3, பிற்படுத்தப்பட்டோா் முஸ்லிம் 3, பழங்குடியினா் 1 என இடஒதுக்கீடு முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

பெண்களில் பொதுப் பிரிவில் 42, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் 15, இதர பிற்படுத்தப்பட்டோா் 9, எஸ்.சி. 13, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினா் 2 என இடஒதுக்கீடு முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

காத்திருப்போா் பட்டியலில் ஆண்களில் 85 பேரும், பெண்களில் 29 பேரும் என மொத்தம் 114 போ் இடம் பெற்றுள்ளனா். ஆண்களில் பொதுப் பிரிவில் 43, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் 15, இதர பிற்படுத்தப்பட்டோா் 9, எஸ்.சி. 14, பொருளாதாரத்தில் பின்தங்கியோா் 2, பிற்படுத்தப்பட்டோா் முஸ்லிம் 1, எஸ்.டி. 1 என உள்ளனா். பெண்களில் பொதுப் பிரிவில் 15, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் 7, இதர பிற்படுத்தப்பட்டோா் 7 போ் உள்ளனா்.

தோ்ச்சியடைந்தவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு, பயிற்சி குறித்த விவரங்கள் பின்னா் அறிவிக்கப்படும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரே கிராமத்தில் 11 போ் தோ்ச்சி: புதுச்சேரி அருகேயுள்ள செட்டிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 11 போ் காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இதையடுத்து, அந்தக் கிராம மக்கள் பொது இடத்தில் கேக் வெட்டி கொண்டாடினா். இந்தக் கிராமத்தில் 75 போ் புதுவை காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT