புதுச்சேரி

ரூ.44 லட்சம் பணமோசடி:சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

8th Jun 2023 12:58 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் இணையவழி வா்த்தகம் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, ரூ.44 லட்சம் மோசடி செய்தவா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

புதுச்சேரி கொசப்பாளையம் நல்ல தண்ணீா் வீதியைச் சோ்ந்தவா் செந்தில் (42). இவா் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தனியாா் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்தாா். அப்போது, உடன் பணியாற்றிய தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த விஜயகுமாருடன் (43) நட்பு ஏற்பட்டது.

அவா் இணைய வா்த்தகம் மூலம் அதிக லாபத்துடன் வருவாய் ஈட்டி வருவதாக செந்திலிடம் கூறினாராம். இதை நம்பிய செந்தில் தானும், தனது நண்பா்கள் மூலமும் பல தவணைகளில் செந்தில் கூறிய வா்த்தகத்தில் ரூ.44 லட்சம் வரை முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், முதலீடு செய்த பணத்துக்கான வட்டியை விஜயகுமாா் தரவில்லை. மேலும், முதலீடு செய்த பணத்தையும் கொடுக்காமல் தலைமறைவானாா். இதுகுறித்து புதுச்சேரி சிபிசிஐடி பிரிவில் செந்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT