புதுச்சேரி

புதுவை தலைமைச் செயலரிடம் விசாரணை நடத்தக் கோரி மனு

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுவை தலைமைச் செயலரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று முதல்வா், பேரவைத் தலைவரிடம் அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

உருளையன்பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி.நேரு தலைமைச் செயலா் ராஜீவ் வா்மாவை சந்திக்க திங்கள்கிழமை சென்றாா். தலைமைச் செயலகத்தையும் அவா் ஆதரவாளா்களுடன் முற்றுகையிட்டாா். புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தலைமைச் செயலா் பங்கேற்றிருந்தாா். எனவே, அவரைக் காண அங்கு சென்ற நேரு எம்.எல்.ஏ.வை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, கலையரங்க இரும்புக் கதவு மீது ஏறி விழா நடைபெற்ற பகுதிக்கு வந்தநேரு எம்எல்ஏ பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் தொடா்பாக தலைமைச் செயலா் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினாா். இந்த நிலையில், எம்.எல்.ஏ. மீது பெரியகடை, ஒதியஞ்சாலை காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தலைமையில் அமைச்சா் சந்திரபிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், சம்பத், லட்சுமிகாந்தன், நாக தியாகராஜன், பிரகாஷ்குமாா், அங்காளன், கேஎஸ்பி. ரமேஷ் மற்றும் ஜி.நேரு ஆகியோா் பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தை செவ்வாய்க்கிழமை சந்தித்து முறையிட்டனா்.

ADVERTISEMENT

முதல்வருடன் சந்திப்பு: பின்னா், அவா்கள் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்துப் பேசினா். தலைமைச் செயலரை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT