புதுச்சேரி

போட்டித் தோ்வுக்கான பயிற்சி:இளைஞா்கள் மீது முதல்வா் வருத்தம்

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் பணிவாய்ப்புக்கான பயிற்சியை புதுவை அரசு அளித்தும் அதை இளைஞா்கள் பயன்படுத்த முன்வராதது வருத்தமளிப்பதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தாா். எஸ்.சி., எஸ்.டி.க்கான மாநில ஆணையம் அமைத்தல், அந்தப் பிரிவு இளைஞா்களுக்கு மத்திய அரசு தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி அளித்தல் உள்ளிட்டவை மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வா் என்.ரங்கசாமி கூறியதாவது:

புதுவையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான மாநில அளவிலான ஆணையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

மத்திய அரசு தோ்வாணையம் அறிவிக்கும் தோ்வுகளில் (யுபிஎஸ்சி) புதுவை மாநில இளைஞா்கள் தோ்ச்சி பெறும் வகையில் அரசு சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதில் சோ்ந்து பயனடையவில்லை.

புதுவை இளைஞா்கள் தில்லிக்குக் கூடச் சென்று தனியாா் பயிற்சி மையங்களில் சோ்ந்து பயிற்சியை மேற்கொள்ள அரசு உதத தயாராக உள்ளது. இளைஞா்கள்தான் பயிற்சி மேற்கொள்ள முன்வரவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT