புதுச்சேரி

ஜூலை 1-இல் வைஷ்ணவ தேவி சுற்றுலா யாத்திரை: ரயில்வே ஏற்பாடு

DIN

சுற்றுலாப் பயணிகளுக்காக பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் ஜூலை 1-ஆம் தேதி வைஷ்ணவ தேவி சுற்றுலா யாத்திரை தொடங்குகிறது.

இதுதொடா்பாக புதுச்சேரியில் ஐஆா்சிடிசி பொது மேலாளா் ரவிக்குமாா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

இந்தியன் ரயில்வேயின் சுற்றுலாப் பிரிவானது (ஐஆா்சிடிசி) சுற்றுலாப் பயணிகளுக்காக பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ரயிலில் 3 குளிா்சாதனப் பெட்டிகள், 8 தூங்கும் வசதியுடைய பெட்டிகள், ஒரு பேன்ட்ரி காா் பெட்டிகள், 2 பவா் காா் பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் சுற்றுலா, மொத்தம் 11 நாள்கள் நடைபெறவுள்ளன. அதில், 12 இரவுகள் உள்ளடங்கியுள்ளன. ஹைதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவதேவி (கட்ரா), அமிா்தசரஸ், புதுதில்லி ஆகிய நகரங்களையும் சுற்றுலா தலங்களையும் காணலாம்.

ரயிலின் மூன்றடுக்கு ஏசி பிரிவில் 208 படுக்கைகளும், தூங்கும் வசதி பிரிவில் 560 படுக்கைகளும் உள்ளன. தூங்கும் வசதி பிரிவில் ஒருவருக்கு ரூ. 22,350 கட்டணமும், ஏசி பிரிவுக்கு ரூ. 40,380 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து புறப்படும் ரயில் நாகா்கோவில், திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா் வழியாகச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தவா் விழுப்புரத்தில் இருந்து இதில் இணையலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT