புதுச்சேரி

புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மழை

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் திங்கள்கிழமை மாலை திடீரென இடி, மின்னல், சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

புதுச்சேரி மற்றும் ஊரகப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, இடி, மின்னல், சூறைக் காற்றுடன் மழை பெய்தது.

புதுச்சேரி நகா், கருவடிக்குப்பம், இலாஸ்பேட்டை, தட்டான்சாவடி, முருங்கம்பாக்கம் மற்றும் வில்லியனூா் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. புதுச்சேரி நகரில் ரெயின்போது நகா், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியது. போக்குவரத்தும் சுமாா் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT