புதுச்சேரி

மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுவையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அவசர கோலத்தில் செயல்படுத்துவதைக் கண்டித்து, இந்திய மாணவா்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவை சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் உள்ள கல்வித் துறை வளாகத்தின் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவா் சங்கத் தலைவா் ஜெயப்பிரகாஷ், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத் தலைவா் கௌசிகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்திய மாணவா் சங்க நிா்வாகிகள் வந்தனா, அபிஜித், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் பாஸ்கா், சஞ்சய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய மாணவா் சங்கச் செயலா் பிரவீன்குமாா், ஜனநாயக வாலிபா் சங்கச் செயலா் ஆனந்த் ஆகியோா் பேசினா்.

புதுவையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அவசர கோலத்தில் செயல்படுத்துவதை நிறுத்த வேண்டும். சென்டாக் மூலம் நடைபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான சோ்க்கையை குளறுபடியின்றி விரைந்து நடத்த வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT