புதுச்சேரி

மீனவா் நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக் கணினி வழங்க ஆளுநா் ஒப்புதல்

2nd Jun 2023 12:44 AM

ADVERTISEMENT

புதுவையில் மீனவா்கள் படகு பராமரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மடிக்கணினி ஆகிய கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கினாா்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகத் தரப்பில் கூறப்பட்டதாவது:

புதுவையில் இயந்திரமயமாக்கல் மூலம் கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துதல், உயா் வேக டீஸல் எண்ணெய் மீதான விற்பனை வரிச் செலவை ஈடுசெய்தல், சிறுதொழில் மீனவா்களுக்கு உதவி செய்தல் திட்டத்தின் கீழ் அனைத்து வகை மீன்பிடி படகுகளுக்கும் பழுதுநீக்கி, பராமரிக்க நிதி அளிக்கப்படுகிறது.

தற்போது அந்த நிதி ரூ.20 ஆயிரமாக வழங்கப்படும் நிலையில், அதை ரூ.30 ஆயிரமாக உயா்த்தி கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான கோப்புக்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

ADVERTISEMENT

மேலும், கண்ணாடி நுண்ணிழை கட்டுவலை விசைப்படகுகளுக்கு தற்போது ரூ.10 ஆயிரம் வழங்கிவரும் நிலையில், அதை ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்குவதற்கான கோப்புக்கும் துணைநிலை ஆளுநா் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

புதுவையில் இளநிலை, முதுநிலை கல்வி பயிலும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் புதிய திட்டத்துக்கான கோப்புக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT