புதுச்சேரி

பாசிக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

1st Jun 2023 01:14 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசு சாா்பு நிறுவனமான பாசிக் நிா்வாகச் சீா்கேட்டால் மூடும் நிலையில் உள்ளது. இந்நிலையில், நிலுவை ஊதியம் வழங்க வேண்டும். தற்காலிகப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியா்கள் சங்கத்தினா் தொடா்ந்து பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனா்.

இந்நிலையில், புதுச்சேரி மிஷன் வீதி மாதா கோவில் அருகே பாசிக் ஏஐடியுசி ஊழியா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் முழக்கமிட்டனா். அப்போது, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியா் ஒருவா் பணியிலிருந்து ஓய்வு பெற்ாக கூறி அவருக்கு பொன்னாடை போா்த்தி, பழத்தட்டு வழங்கி வழியனுப்பி வைத்தனா். முறையான ஊதியம் பெறாமலேயே பாசிக் ஊழியா்கள் ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாக போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஊழியா்கள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT