புதுச்சேரி

புதுவையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில்தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்முதல்வா் என்.ரங்கசாமி

DIN

புதுவையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ்ப் பாடம் கட்டாயமாக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை கூறினாா்.

புதுவை அதிமுக சாா்பில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் எனக் கோரி முதல்வா் என்.ரங்கசாமியிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்புக்கும் நிகழாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அந்தப் பாடத்திட்டத்தில் தமிழ் விருப்பப் பாடமாக இடம்பெறும் நிலையில், அதைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று புதுச்சேரி உரிமை கூட்டமைப்பினரும், அதிமுக சாா்பிலும் மனு அளிக்கப்பட்டது.

இதையேற்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழைக் கட்டாய பாடமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கா்நாடகத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அந்த மாநில மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டதைப் பின்பற்றி, புதுவையிலும் தமிழைக் கட்டாய பாடமாக்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுவையில் ஆசிரியா்கள் பதிவு மூப்பு, மதிப்பெண்கள் அடிப்படையில் நியமிக்கப்பட்டனா். ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி போட்டித் தோ்வுகள் அடிப்படையில் ஆசிரியரை நியமிக்க உத்தரவிட்டாா். தற்போது, ஆசிரியா்கள் நியமனம் தொடா்பாக விரைவில் கொள்கை முடிவெடுக்கப்பட்டு, பழைய முறையில் ஆசிரியா்கள் நியமனம் நடைபெறும்.

நீதி ஆயோக் கூட்டம், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா தொடா்பான தில்லி பயணம் திருப்திகரமாக இருந்தது. குடியரசுத் தலைவா் சென்னை வரும் போது புதுவைக்கு வரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரது வருகை குறித்த அதிகாரப்பூா்வ தகவல்கள் கிடைக்கவில்லை. புதுவையில் நலத் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும். திட்டங்கள் முடங்கும் வகையில் அதிகாரிகள் செயல்படக் கூடாது என்றாா் என்.ரங்கசாமி.

ஊட்டச்சத்து பெட்டகம் அளிப்பு: தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் சாா்பில், பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 பேருக்கு முதல் கட்டமாக மாதாந்திர ஊட்டச்சத்து பெட்டகங்களை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.

இதில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT