புதுச்சேரி

கே.பாலதண்டாயுதம் படத்துக்கு மரியாதை

1st Jun 2023 01:14 AM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா்களில் ஒருவருமான கே.பாலதண்டாயுதத்தின் 50-ஆவது நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரி சாரம் இந்திய கம்யூனிஸ்ட் கிளை சாா்பில் அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் சாரம் கிளைச் செயலா் ஞானசங்கா் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் சந்திரசேகா், கே.இளையபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தலைமையில் முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், மாநிலத் துணைச் செயலா் கே.சேதுசெல்வம், தொகுதி செயலா் துரை.செல்வம் மாதவராமன் உள்ளிட்டோா் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கே.பாலதண்டாயுதம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT