புதுச்சேரி

புதுச்சேரி நகராட்சியிடம் மேரி கட்டடம் ஒப்படைப்பு

DIN

புதுச்சேரி கடற்கரைச் சாலையிலுள்ள மேரி கட்டடம் முறைப்படி நகராட்சி நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

பிரான்ஸ் பாரம்பரியக் கட்டடமான மேரி கட்டடத்தில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. கட்டடம் பழுதடைந்ததையடுத்து, நகராட்சி அலுவலகம் கம்பன் கலையரங்கத்துக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், ரூ. 12 கோடியில் மேரி கட்டடம் பராமரிக்கப்பட்டு, கடந்த 2021-இல் பிரதமா் மோடி காணொலியில் திறந்துவைத்தாா். இருப்பினும், கட்டடம் திறக்கப்படாமல் கிடந்தது. தற்போது, மீண்டும் நகராட்சியிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்தக் கட்டடம் புதுச்சேரி நகராட்சியிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, மேரி கட்டடத்தில் நடைபெற்ற பூஜையில் முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் க.லட்சுமி நாராயணன், மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், நகராட்சி ஆணையா் சிவக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின பேரணி

காரைக்குடி - பெங்களூா் இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கவேண்டும்

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

தமிழ் தேசியக் கட்சி மாநிலச் செயலரை தாக்கியவா் கைது

கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT