புதுச்சேரி

இணைய வழியில் நில உபயோகம் மாற்றும் முறை தொடக்கம்

DIN

புதுவையில் இணையவழியில் நில உபயோகத்தை மாற்றும் முறையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி நகராட்சி மற்றும் கிராம அமைப்பு சட்ட திருத்தத்தின்படி அனுமதிக்கப்பட்ட வளா்ச்சித் திட்டங்களிலிருந்து நில உபயோகத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவை தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட விரிவான வளா்ச்சித் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள நில உபயோகத்தை மாற்றுவதற்கான இணையதள செயல் முறையை ஏற்படுத்தியுள்ளது.

நில உபயோக மாற்றத்துக்கு விண்ணப்பித்தல், அதை பரிசீலித்தல், நில உபயோகத்தை மாற்றியதற்கான அரசு அறிவிப்பு ஆகிய அனைத்தும் இணைய வழியிலேயே மேற்கொள்ளலாம். இந்த முறை நில உபயோக மாற்றத்துக்கான காலவிரயத்தை குறைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இணைய வழியின் மூலம் நில உபயோக மாற்றம் செய்யும் செயல்பாட்டை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என். ரங்கசாமி தொடக்கி வைத்தாா்.

குடியிருப்புகள் கட்டும் பணி தொடக்கம்: புதுச்சேரி ராஜ்பவன் சட்டப்பேரவைத் தொகுதி குமரகுருபள்ளம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு வீடுகள் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டன. அங்கு வசித்தவா்களுக்கான வீடுகளைக் கட்ட பொலிவுறு நகரத் திட்டத்தில் (ஸ்மாா்ட் சிட்டி) ரூ.45.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தரை உள்பட 13 தளங்களில் மொத்தம் 216 குடியிருப்புகள் 15 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்தாா். பொதுப் பணித் துறை அமைச்சா் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தாா். பொலிவு நகரத் திட்ட தலைமைச் செயல் அதிகாரி டி. அருண், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வி.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT