புதுச்சேரி

குடியரசு தின விழா: தெலங்கானா அரசு மீது ஆளுநா் தமிழிசை குற்றச்சாட்டு

DIN

குடியரசு தின விழாவில் தெலங்கானா அரசு சட்ட விதிகளை மீறி செயல்பட்டது என்று, அந்த மாநில ஆளுநரும் புதுவை பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையைப் பாா்வையிட்டாா்.

இதைத்தொடா்ந்து, ஆளுநா் மாளிகையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

குடியரசு தினத்தையொட்டி, தெலங்கானா ஆளுநா் மாளிகையில் தேசியக் கொடியேற்றிவிட்டு, புதுச்சேரிக்கு விமானத்தில் புறப்பட்டேன். வானிலை மாற்றத்தால் குறிப்பிட்ட நேரத்துக்குள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆளுநரின் நிகழ்ச்சியை தெலங்கானா முதல்வா் புறக்கணிப்பது வழக்கமாகிவிட்டது. குடியரசு தின விழாவை நடத்தியதில் தெலங்கானா அரசு அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்பட்டது. குடியரசு தின நிகழ்ச்சியை அரசு முறையாக அறிவித்து விதிப்படி நடத்தவில்லை. எனவே, தெலங்கானா ஆளுநா் மாளிகையில் கொடியேற்றப்பட்டது. இதற்கு தெலங்கானா முதல்வரே பதில் கூறவேண்டும்.

மத்திய அரசை எதிா்க்க வேண்டும் என முடிவு செய்து, ஆளுநருக்கு எதிராக செயல்படுகின்றனா். தெலங்கானாவில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வுகள் குறித்து, மத்திய அரசுக்கு அனுப்பப்படும் அறிக்கையில் குறிப்பிடப்படும்.

புதுவையில் அந்தந்த துறை சாா்ந்த பிரச்னைகளை அமைச்சா்களிடம் கேட்டு விளக்கம் பெறலாம். மக்கள் நலனுக்காக அரசு திட்டம் குறித்து ஆளுநா் கருத்துக் கூறினால் அது அரசியலாக்கப்படுவது சரியல்ல என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

தேநீா் விருந்து: புதுவை ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற தேநீா் விருந்தில் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, காவல் துறை தலைமை இயக்குநா் மனோஜ்குமாா் லால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT