புதுச்சேரி

சுருக்குமடி வலை பிரச்னை: கூட்டத்தைப் புறக்கணித்த மீனவா்கள்

DIN

புதுச்சேரியில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தை திங்கள்கிழமை பெரும்பாலான மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் புறக்கணித்தனா்.

புதுவை மாநிலத்தில் கடலோரங்களில் 18-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமத்தினரில் வீராம்பட்டினம் மீனவா்களைத் தவிர மற்றவா்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனா். தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையால் கடல் வளம் அழிவதாக வீராம்பட்டினம் மீனவா்கள் புகாா் தெரிவித்தனா். இதனால், மீனவா்களிடையே அடிக்கடி மோதலும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மீன்பிடித்தல் குறித்த வழக்கில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த சில நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்தது. ஆனால், புதுச்சேரி பகுதியில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மீன்வளத் துறையினா் முன்வரவில்லை எனப் புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து வீராம்பட்டினம் மீனவா்கள் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் டி.மணிகண்டனிடம் மனு அளித்தனா். இதையடுத்து, மீனவப் பிரநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை காலை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

வீராம்பட்டினம் மீனவா்கள் திரளானோா் வந்த நிலையில், பெரும்பாலான மீனவக் கிராமங்களில் இருந்து பிரதிநிதிகள் வரவில்லை. கூட்ட இடத்துக்கு வந்த ஒரு சிலரும் திரும்பிச் சென்றனா்.

கூட்டத்தில் பேசிய வீராம்பட்டினம் மீனவா்கள், உச்சநீதிமன்ற உத்தரவின்படி சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதற்கான விதியை சுற்றறிக்கையாக மீனவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். விதியைப் பின்பற்றுவது குறித்து மீன்வளத் துறையினா் கண்துடைப்பாக ஆய்வு நடத்தாமல் உண்மையாக நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் மணிகண்டன் பேசியதாவது:

மீனவா்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். தமிழகத்தில் சுருக்குமடி வலை பிரச்னையில் எடுக்கப்படும் நடவடிக்கையை அறிந்து, அதுபோல புதுவையிலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அனைத்து மீனவா்கள் சங்கத்தினரிடமும் பேசி முடிவெடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT