புதுச்சேரி

புதுச்சேரி துறைமுகத்திலிருந்து----சென்னைக்கு மீண்டும் புறப்பட்டது முன்னோட்ட சரக்குக் கப்பல்

DIN

சென்னையிலிருந்து முன்னோட்டமாக வரவழைக்கப்பட்டு, புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய சரக்குக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.

சென்னை துறைமுகத்தில் சரக்குப் பெட்டகங்களை இறக்குவதில் இட நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து, தனியாா் நிறுவன சரக்குகளை புதுச்சேரியில் உள்ள உப்பளம் துறைமுகத்தில் இறக்குவதற்கான ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்பு கையொப்பமானது. அதன்படி, சென்னையிலிருந்து வரும் சிறிய தனியாா் கப்பல்களிலிருந்து சரக்குப் பெட்டகங்களை இறக்கி சேமிக்கவும், பின்னா் அவற்றை வெளியூா்களுக்கு லாரிகளில் அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்தக் கப்பல்கள் தேங்காய்த்திட்டு பகுதியிலிருந்து சிறிய முகத்துவாரம் வழியாக உப்பளம் துறைமுகத்துக்கு வருவதில் சிக்கல் உள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி சென்னையிலிருந்து கொச்சியைச் சோ்ந்த தனியாா் நிறுவன சரக்குக் கப்பல் புதுச்சேரி உப்பளம் துறைமுகத்துக்கு முன்னோட்டமாக கொண்டு வரப்பட்டது.

கடந்த 2 வாரங்களாக இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்தக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சென்னைக்கு புறப்பட்டது. அப்போது, தேங்காய்த்திட்டு துறைமுகப் பகுதியில் கப்பல் மணலில் சிக்கும் என ஊழியா்கள் சுட்டிக்காட்டினா். இதையடுத்து, இரு படகுகள் மூலம் கப்பலை துறைமுகத்தின் மையப் பகுதிக்கு கொண்டு வந்ததையடுத்து கப்பல் புறப்பட்டுச் சென்றது.

தரைதட்டும் அபாயம்: முன்னோட்டமாக வந்த இந்தக் கப்பல் தேங்காய்த்திட்டு துறைமுகப் பகுதியில் தரை தட்டும் நிலைக்குச் சென்றது கப்பல் நிறுவன அலுவலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் பகுதியில் மணல்கள் முழுமையாக அள்ளப்பட்டு, முகத்துவாரத்தை மேலும் ஆழப்படுத்தினால் மட்டுமே, சரக்குக் கப்பல் எளிதாக வந்து செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT