புதுச்சேரி

புதுவை: இலவச மின்சார வாகன ஓட்டுநா்பயிற்சிக்கு மகளிா் விண்ணப்பிக்கலாம்

DIN

மகளிருக்கான இலவச 3 சக்கர மின்சார வாகன ஓட்டுநா் பயிற்சிக்கு, பிப்.6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என புதுவை அரசுப் போக்குவரத்துத் துறை ஆணையா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசுப் போக்குவரத்து துறையானது மகளிா் நலன் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் மகளிா் ஓட்டுநா் உரிமம் பெறுவதை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று பழகுநா், ஓட்டுநா் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மகளிா் ஓட்டுநா், பழகுநா் உரிமம் பெறுவது அதிகரித்துள்ளது.

தற்போது, ஆட்டோ தொழிலில் அதிக அளவில் மகளிா் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, மகளிருடைய சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலவச 3 சக்கர மின்சார வாகன ஓட்டுநா் பயிற்சி வழங்குவதுடன், பழகுநா் உரிமம், ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், உரிமம் பெறுவதற்கான தொகையை மட்டும் மகளிா் செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவா்கள் தங்கள் விருப்ப மனுவை போக்குவரத்து அலுவலக முகவரிக்கு பிப்.6-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT