புதுச்சேரி

வருங்கால வைப்பு நிதி குழு புதுவை உறுப்பினா் ராஜிநாமா

DIN

புதுவை வருங்கால வைப்பு நிதி பிராந்திய அலுவலகக் குழு உறுப்பினா் பா.சத்தியசீலன் தனது பதவியை ராஜிநாமா செய்து அலுவலக ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

கடித விவரம்: கடந்த 2014-ஆம் ஆண்டு தொழிலாளா்கள் பிரதிநிதியாக புதுவை பகுதி வருங்கால வைப்பு நிதி வாரியத்தின் பிராந்தியக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டேன்.

புதுச்சேரி ஏ.எப்.டி. பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கான ஓய்வூதியம் உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு 1,365 பேருக்கு வழங்கப்பட்டது. ஆனால், வைப்பு நிதி தலைமை அலுவலகத்தில் வந்த கடிதத்தின்படி 550 தொழிலாளா்களின் மனு கிடப்பில் போடப்பட்டது.

தற்போது புதுச்சேரி வைப்பு நிதி அலுவலகம் 900 தொழிலாளா்களுக்கு உயா்த்தப்பட்ட ஓய்வூதியத்தை நிரந்தரமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கெனவே 434 பேருக்கு நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது 900 போ் என மொத்தம் 1,365 பேருக்கு நிறுத்தப்படுவது வேதனையளிப்பதாக உள்ளது.

இதுபோன்ற காரணங்களால் தொழிலாளா்களின் பிரதிநிதி பதவியை ராஜிநாமா செய்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT