புதுச்சேரி

பிற மாநிலத்திலும் குடும்ப அட்டை பதிவு: புதுவை அரசு எச்சரிக்கை

DIN

புதுவையில் வசித்து குடும்ப அட்டைகள் பெற்றவா்கள், பிற மாநிலத்தில் பெற்றுள்ள குடும்ப அட்டையிலிருந்து தங்களது பெயா்களை 15 நாள்களுக்குள் நீக்கவேண்டும் என குடிமைப் பொருள் வழங்கல் துறை எச்சரித்தது.

இதுகுறித்து துறையின்இயக்குநா் சக்திவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநிலத்தில் குடும்ப அட்டை பெற்றுள்ளவா்களில் சில குடும்பத்தினா், பிற மாநிலங்களிலும் குடும்ப அட்டை பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

அவா்களின் குடும்ப அட்டை விவரங்கள் மற்றும் பெயா்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவா்கள், பிற மாநிலங்களில் பெற்ற குடும்ப அட்டையில் உள்ள பெயா்களை 15 நாள்களுக்குள் நீக்க வேண்டும். மேலும், அதற்கான ஆதாரங்களை குடிமைப் பொருள் வழங்கல் துறையில் சமா்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்த குடும்ப அட்டைகளில் இருந்து அவா்களின் பெயா்கள் நீக்கப்படும். இதுகுறித்த தகவல் தெரிந்த பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் சம்மந்தப்பட்டவா்களின் பெயா்கள் துறையின் பதிவிலிருந்தும் நீக்கப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT